சுரண்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து; 3பேர் பலி.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வாடியூர் என்ற கிராமத்திற்கு திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் இருந்து ஆனைகுளம் கிராமத்திற்கு வயல் வேலைக்காக சுமார் 15 நபர்கள் ஏற்றி கொண்டு வந்த லோடு ஆட்டோவானது வாடியூர் பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு வளைவில் லோடு ஆட்டோ திரும்ப முயற்சி செய்த போது, வண்டி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோவானது திடீரெனெ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஜானகி, வள்ளியம்மாள், பிச்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஓட்டுனர் உட்பட வண்டியில் காயமடைந்த 12 பேர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறந்த நபர்களின் உடல்களானது ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. லோடு ஆட்டோ கவிழ்ந்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுரண்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments