Breaking News

தமிழகத்திற்கு புதிய புதிய முதலீடுகள் வந்தால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு.


தமிழகத்திற்கு புதிய புதிய முதலீடுகள் வந்தால்  தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும், தமிழகம் வளர்ச்சி பெறும்  - அதற்காக தான் வெளிநாட்டு பயணங்களை நம் முதல்வர் மேற்கொண்டு உள்ளார் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்  கீதா ஜீவன் பேச்சு




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் அமைந்துள்ள  தனியார் திருமண மஹாலில் வைத்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றியம் சார்பில் திமுக  செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இச் செயல்வீரர்கள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.


இந்நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் கீதா ஜீவன் சிறப்புரை ஆற்றுகையில், திமுகவின் தலைவர் அறிவுறுத்தல் படி மாவட்டம் முழுவதும் கிளை கழகம் வரை இக்கூட்டம் நடத்தபட்டு வருகிறது, இந்த ஆண்டு திமுகவிற்கு  பவள ஆண்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உருவாக்க பட்ட கட்சி இந்தியாவிலேயே மிகப் பெரியகட்சியாக மாறிய உள்ளது.


2024 உள்ளிட்ட அனைத்து தேர்தலில் நாம் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன் இதற்கு ஆணி  வேற அமைவது கட்சி தொண்டர்கள் தான், திமுகவில் தொண்டர்கள் தான் பலம் அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் 40/ 40 வெற்றி பெற்றோம்..குறிப்பாக கோவில்பட்டியில் 60 ஆயிரம்  வாக்குகள் பெற்றோம்.


வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களை நாம் பிடிக்க வேண்டும் அதில் கோவில்பட்டி தொகுதியும் ஒன்ற இருக்க வேண்டும், மீண்டும் நாம் ஆட்சியில் அமரவேண்டும் 200 இடங்களை பிடிக்கவேணும் அதான் நம் லட்சியம் தலைவரின் எண்ணம் கூட அதுதான் நாம் அதற்காக படுபடுவோம்.


தமிழகத்திற்கு புதிய புதிய முதலீடுகள் வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் தமிழகம் வளர்ச்சி பெறும்  அதற்காக தான் வெளிநாட்டு பயணங்களை முதல்சர் மேற்கொண்டு உள்ளார்.


கிராமபுறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்ட வருகிறது..அதற்கான பயனாளிகள் தேர்வு செய்து   வீடுகள் கட்டி கொடுக்கபட்டு வருகிறது.


அதேப கிராம புறத்தில் விவசாயத்திற்கு தேவையான மண் அள்ள உத்தரவு வழங்கபட்டு உள்ளது அதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் குளங்களும்  தூர்வார பட்டு வருகிறது


கலைஞர் முப்பெரும் விழாவை முன்னிட்டு  கோவில்பட்டியில் கலைஞர் திருவுருவ சிலை அமைய உள்ளது என்பதையும் இந் நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்

No comments

Copying is disabled on this page!