தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜகோபால்நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மத்திய அரசு ஊழியர் காலனி, சிவந்தாகுளம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர் பொன்னுசாமி, கவுன்சிலர் ஜான் (எ) சீனிவாசன், வட்ட பிரதிநிதி ஜெயமுருகன், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments