பூம்புகார் சுற்றுலா மையம் மேம்பாட்டு பணிகள் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெறும் என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
பூம்புகார் சுற்றுலா மையம் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். பூம்புகார் சுற்றுலா மையம் மேம்பாட்டு பணிகள் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு பெறும் என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
சீர்காழி அருகே பூம்புகார் சுற்றுலா மையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து சுற்றுலா மையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவிக்கையில் 1975ம் ஆண்டு திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் பூம்புகார் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கியது அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் மேம்படுத்தும் பணிகள் ரூ.23 கோடி செலவில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
தற்பொழுது வரை 70%பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிவடையும் எனவும் திருவலங்காடு வெடி விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா மூன்று லட்சமும் அதில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் வழங்கப்படும் என தெரிவித்தார். காரைமேடு பகுதியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் பாதிக்கப்படும் ஆற்றுப்படுகை கிராம மக்கள் தங்கும் வகையில் இரண்டு புயல் பாதுகாப்பு மையம் ரூபாய் 14 கோடி செலவில் கட்டுவதற்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதற்காக இடம் கையக படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 15 தினங்களுக்குள் புயல் பாதுகாப்பு மையம் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
முகத்துவாரம் தூர்ந்து போய் உள்ள கடலோர கிராமங்களில் தூர் வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
No comments