Breaking News

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூலம் நடைபெற்ற மினி மரத்தின் போட்டி. நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.


பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு  சங்கத்தின் சார்பாக ரெட் - ரன் எனப்படும் மினி மாரத்தான் போட்டி இன்று காலை மாவட்ட ஆட்சியர் வளாகம் எதிரே தொடங்கியது இப்போட்டியினை துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த மினிமாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். 



காரைக்காலின் முக்கிய வீதி வழியாக சென்ற இப் பேரணியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எச்.ஐ.வி எய்ட்ஸ் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் பரிசுகளை வழங்கினார். 


இதில் நல்லவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார், முதன்மை கல்வி அதிகாரி  விஜயமோகனா மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!