Breaking News

புவனகிரியில் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் மருத்துவ பரிசோதனை.


கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி காலேஜில் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை சார்பில் 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இரத்த அழுத்தம் சர்க்கரை பரிசோதனை மற்றும் உடல் எடை உயரம் அளவீடு செய்யும் முகாம் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு கிருஷ்ணாபுரம்அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார் கல்லூரி தாளாளர் சுதா வரவேற்றார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் சுகாதார ஆய்வாளர்கள் தனசேகரன் வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகாமில் கல்லூரி மாணவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.


மேலும் இதில் பகுதி சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி கல்லூரி நர்சிங் விரிவுரையாளர்கள் அருணா புவனேஸ்வரி ராமகிருஷ்ணன் மஞ்சு அபிநயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் கன்னியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் புரட்சியார் நன்றி கூறினார்.

No comments

Copying is disabled on this page!