Breaking News

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், பேவர் பிளாக் சாலை, ஹைமாஸ் விளக்கு, பூங்காக்கள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட பொன்சுப்பையாநகர் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளரும், மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர் ஜெயசீலி, வட்ட பிரதிநிதி கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

No comments

Copying is disabled on this page!