அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பல்நோக்கு மேடையை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார்
புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மேடை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவில்,தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை தலைவருமான செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த பல்நோக்கு மேடையை திறந்து வைத்து பள்ளியின் உபயோகத்திற்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் லிங்கசாமி, தலைமை ஆசிரியர் பழனி, ஆசிரியர்கள் மற்றும் தொகுதி முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments