மூன்று மாத ஆண் குழந்தைக்கு படுத்துக்கொண்டு தாய் பால் ஊட்டியதால் குழந்தைக்கு புறையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு போலீசார் விசாரணை.
இந்நிலையில் இவர்களுக்கு 3 மாத ஆண் சுதர்சன் என்கின்ற குழந்தை உள்ளது இந்நிலையில் கீதா தனது குழந்தை சுதர்சனுக்கு படுத்துக் கொண்டே தாய்ப்பால் ஊட்டியுள்ளார் இதில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பயந்து போன பெற்றோர்கள் ஆட்டோவில் குழந்தையை எடுத்துக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்க்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மூன்று மாத கைக்குழந்தைக்கு படுத்துக்கொண்டே தாய் பால் ஊட்டியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments