ரிஷிவந்தியம் ஊராட்சியில் "மக்களுடன் முதல்வர்" எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முனிவாழை, வெங்கலம், பிரிவிடையாம்பட்டு, ரிஷிவந்தியம், முட்டியம், மண்டக்ப்பாடி, அந்தியூர், குன்னியூர், ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு, நேற்று காலை ரிஷிவந்தியம் ஊராட்சியில், நடைபெற்ற ஊரகப்பகுதியில் "மக்களுடன் முதல்வர்" எனும் மகத்தான திட்ட முகாமினை தொடங்கி வைத்து கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, பொதுமக்களிடம் திராவிட மாடல் அரசின் பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் ரிஷிவந்தியம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மற்றும் துணை பெருந்தலைவர், ரிஷிவந்தியம் ஒன்றிய கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பணிகள், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், கழக உடன் பிரப்புகள் கலந்து கொண்டார்கள்.
No comments