மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கூடைப்பந்து ஓட்டப் பந்தய போட்டி நாளை 29 ஆம் தேதி நடக்கிறது
இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய விளையாட்டு பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளாக ஆகஸ்ட்29 ஆம் தேதியை இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறது.
அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட பிரிவின் சார்பில் வருகிற 29ஆம் தேதி ஜோலார்பேட்டை சிறு விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து போட்டி மற்றும் ஓட்ட பந்தய போட்டி நடத்தப்பட உள்ளது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் 19 வயதிற்கு உட்பட்டோர். 25 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்ட போட்டியிலும், 45 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 100 மீட்டர் ஓட்ட போட்டியிலும் கலந்து கொள்ளலாம்.
இப்போட்டிகள் காலை 7 மணிக்கு நடைபெறும், போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர், வீராங்களைகள் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டரங்கத்தில் காலை 6 மணிக்குள் நேரில் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments