Breaking News

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருநள்ளாறு தனியார் சோப்பு நிறுவனத்தை முற்றுகையிட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம் அறிவிப்பு.


காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் காரைக்காலைச் சேர்ந்த லாரிகள் வெளி மாநிலங்களுக்கு சுமை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த வாடகையை குறைத்து விட்டதாகவும், இதனிடையே வெளியூர்களில் இருந்து வாடகைக்கு எடுக்கும் லாரிகளுக்கு அதிக வாடகை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், இதனை கண்டித்தும், வாடகையை 15 சதவீதம் உயர்த்தி தர வேண்டும், அரசு நிர்ணயித்துள்ளது போல டன் கணக்கிற்கு ஏற்ப வாடகை தர வேண்டும், சுமை ஏற்றும் விபரத்தை சங்கத்திடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக தொழிற்சாலை நிர்வாகத்திலும் பேசி எந்த பயனும் இல்லாத நிலையில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுச்சேரி அரசிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நாளை திருநள்ளாறு தனியார் சோப்பு தயாரிக்கும்  தொழிற்சாலையை முற்றுகையிட போவதாக காரைக்கால் மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம் சுவரொட்டி வெளியிட்டு இருந்தது. இதனை அடுத்து காரைக்கால் மாவட்ட வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் லாரி உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார். 


பேச்சுவார்த்தைக்கு தொழிற்சாலை தரப்பில் யாரும் வராத நிலையில் பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காரைக்கால் மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜெண்டுகள் சங்க தலைவர் ஆறுமுகம் "ஏற்கனவே அறிவித்திருந்தது போல முற்றுகை போராட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!