Breaking News

புவனகிரி லயன்ஸ் சங்கம் சார்பில் கண் மற்றும் உடல் தானம் வழங்கிய 26 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா.


கடலூர் மாவட்டம் புவனகிரி லயன்ஸ் சங்கம் சார்பில் கண் தானம் மற்றும் உடல் தானம் வழங்கிய 26 குடும்பத்தினர்களுக்கு பாராட்டு விழா லயன்ஸ் சங்கத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனியார் பள்ளியில் நடைபெற்றது.

செயலாளர் முரளி வரவேற்றார் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சாலை. கனகதாரன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அசோக் பாஸ்கர் பங்கேற்று கண் தானம் வழங்குவது உடல் தானம் வழங்குவது அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட ஜி எம் டி ஒருங்கிணைப்பாளர் கமல் கிஷோர் ஜெயின் பாராட்டுரை வழங்கினார்.


மண்டல தலைவர் ராமச்சந்திரன் வட்டாரத் தலைவர் விஜயகுமார் மாவட்ட கண் பார்வை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலேடா மாவட்ட கண்காணம் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் மாவட்ட உடல் தானம் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் 2023-24 ம் ஆண்டிற்கான  கண்கள் மற்றும் உடல் தானம் வழங்கிய 26 குடும்பத்தினருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


மேலும் இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க உறுப்பினர்கள் ஏசிபி ரத்தின சுப்பிரமணியன், டிராய் ராஜன், மகாலிங்கம், சேதுராமன், ராஜு, சண்முகசுந்தரம், ஜெகநாதன், சிவகுமார், சையத் அல்லாம், எழில்வேந்தன், ஹரிஹரன், ராமச்சந்திரன், ஜெயப்பிரியா  சிவகுமார் மற்றும் கண் மற்றும் உடல் கொடை வழங்கிய குடும்பத்தினர்கள் பங்கேற்றனர்  நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் கே பி பாலமுருகன் நன்றி கூறினார்.

No comments

Copying is disabled on this page!