மயிலாடுதுறை ரயிலடி அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா.
மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் ஆலய திருக்குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்:-
மயிலாடுதுறை ரயிலடி வடுக தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அருள்மிகு லெக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில் உள்ளது. இவ்வாலயம் புணரை அமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நான்காம் காலயாகசாலை பூஜையில் மகாபூரணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை எடுத்துக்கொண்டு பட்டாச்சாரியார்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க விமான கும்பம் அடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாளுக்கு ஸ்ம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
பெருமாளுக்கு புனித நீரால் மகாபிஷேகம் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
No comments