உளுந்தூர்பேட்டை கூத்தாண்டவர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமித வேணுகோபால சுவாமி மற்றும் கூத்தாண்டவர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சுவாமியை வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கூத்தாண்டவர் சுவாமி திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் வெகு விமரசையாக நடைபெற்றது.
இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலிபூஜைகளும் நடந்தது தொடர்ந்து அங்குரார்பணம், ரக்ஷாபந்தனமும் யாகசாலை பிரவேசமும் நடைபெற்றது அதன்பின் முதற்கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும் நடந்தது. இதைத் தொடர்ந்து கூத்தாண்டவர் மற்றும் வேணுகோபாலசுவாமிகளுக்கு விமான கலச பிரதிஷ்டையும் மகா தீபாராதனையும் நடந்தது தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை கோ பூஜை, லட்சுமி, அஷ்டலட்சுமி, தன்வந்திரி ஹோமங்களும் மகாபூர்ணாகுதியும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கோபுர கலசங்களை வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் அப்பொழுது கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமைக்கு வேணுகோபால சுவாமி மற்றும் கூத்தாண்டவரை வழிபட்டனர்.
தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments