திருவள்ளூர் அருகே குப்பை கிடங்கால் துர்நாற்றம் நோய் பரவும் அபாயம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார் மேட்டுக்காலனி பகுதியில், 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேரும் குப்பைகளை துாய்மை பணியாளர்கள் வங்கனுார் மேட்டு காலனி சுடுகாட்டிற்கு செல்லும் சாலையோரம் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும், இந்த குப்பை வழியாக சென்ற நான்கு மாடுகள் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளன.
இதனால் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என வங்கனுார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments