காரைக்காலில் பள்ளி மாணவ, மாணவிகளின் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் நிலையில் பள்ளிக்கு வந்திருந்த மாணவ மாணவிகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை பள்ளிகளில் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமடைந்து விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள ஆண்டவர் ஆங்கிலப் உயர்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ராதை போன்ற வேடமணிந்து பள்ளிக்கு வந்திருந்த 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதத்தில் பக்தி பாடலுக்கு நடனமாடி ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
சின்னஞ்சிறு பிள்ளைகள் ஸ்ரீ கிருஷ்ணரின் வேடமணிந்து ஸ்ரீகிருஷ்ணரை கண் முன் நிறுத்தினர். இதனை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
No comments