தென்காசியில் கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலம் சென்ற குழந்தைகள்.
தென்காசி - புளியங்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு 400 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை, முருகன் வேடம் அணிந்து 3 - கிலோ மீட்டர் வரை ஊர்வலமாக சென்று குழந்தைகள்.
தென்காசி கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் சமேத உலகம்மன் திருக்கோவில் வளாகத்தில் இருந்து விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னிய ராஜன் தலைமையில் பஜனை உடன் கீழ மாசி வீதி தெற்கு மாசிவீதி வடக்குமாசிவீதி வழியாக கிருஷ்ணர் ராதை வேடமடைந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பின் பெற்றோருடன் ஊர்வலமாக சென்று மீண்டும் கோவில் வாசலை வந்தடைந்தனர்.
இதே போன்று புளியங்குடியில் கிருஷ்ணர், ராதை, முருகன் வேடமணிந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் டிஎன் புதுக்குடியில் இருந்து பேரணியாக துவங்கிய நிலையில் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று பாலசுப்பிமணியசுவாமி முன்பு வைத்து நிறைவு பெற்றது. இதில் சிறுவர்களுக்கு வாய்ஸ்ஆப் பவுண்டேசன் சார்பில் ஆனந்தன் பரிசுகளை வழங்கினார்.
No comments