அக்கரை ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம்.
காரைக்கால் மாவட்டம் அக்கரை வட்டம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 3 மாதங்களாக கோவில் புணரமைப்பு வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், கோவில் திருப்பணி வேலைகள் நிறைவுற்று நேற்று விக்னேஸ்வரர் பூஜை உடன் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கட புறப்பாடு தொடங்கியது. புனித நீர் அடங்கிய கலசங்கரை சிவாச்சாரியார்கள் சுமந்து கோயிலை வலம் வந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் அருள் பெற்றனர்.
No comments