காரைக்கால் ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலய கும்பாபிஷேகம்.
காரைக்கால் மையப் பகுதியில் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலய கும்பாபிஷேகம். புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. கடந்த 28ம் தேதி அன்று காலை விக்னேஸ்வர பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையுடன் (ஸம்ப்ரோக்ஷணம்) கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று காலை 30ம் தேதி 4ம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மகா பூர்ணாஹதி மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து ஆலயத்தை வலம் வந்து வேதமந்திரங்கள் முழங்க ஆலய விமானங்கள் மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவர் கோதண்டராமருக்கு மகா அபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து ஸ்ரீ கோதண்டராமரின் அருள் பெற்றனர்.
No comments