கடுமையான கட்டுப்படுகளுடன் சர்சைக்குள்ளான கிங்ஸ்லி பள்ளி திறப்பு.
கடுமையான கட்டுப்பாடுகளுடன் கிருஷ்ணகிரி பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி இன்று செயல்பட பள்ளி கல்வித்துறை மற்றும் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
மாணவ மாணவிகளை பெற்றோர்கள் வந்து பள்ளியில் இறக்கி விட்டு செல்கின்றனர். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையும் காவல்துறையும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதாவது சிசிடிவி கேமராக்கள் பள்ளிகளை சுற்றியும் மற்றும் ஒவ்வொரு பள்ளி அறைக்கும், மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான பள்ளி வாகனங்களில் முறையாக ஜிபிஎஸ் கருவி பொருத்தியும் வாகனங்களுக்கு சிசிடி கேமராவும் பொருத்தியும் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இந்தப் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிக அளவு போடப்பட்டுள்ளது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments