காரைக்காலில் அம்மையார் லயன்ஸ் சங்கம் சார்பில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
காரைக்கால் அம்மையார் லயன்ஸ் சங்கம் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. காரைக்கால் அம்மையார் லைன்ஸ் சங்கத்தின் தலைவர் கந்தபழனிவேல், செயலாளர் அருணகிரி ஆகியோர் தலைமையில் பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுரேஷ்கண்ணன், துரைராஜன், அறிவழகன், குமரவேல், சூரியமூர்த்தி, முருகேசன், சுரேஷ், கார்த்திகேயன், அருண்மொழிதேவன், வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments