உளுந்தூர்பேட்டை அருள்மிகு கனகவல்லி தாயார் சமேத பெருமாள் கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா.
உளுந்தூர்பேட்டையில் உள்ள அருள்மிகு கனகவல்லி தாயார் சமேத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற உறியடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு உறியடி திருவிழா நடைபெற்றது அப்போது கோவில் முன்பாக மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் மற்றும் கிருஷ்ண பரமாத்மா ஆகிய உற்சவ மூர்த்திகள் முன்பாக இரு தூண்களில் துவரை மிலர்களால் தேங்காய் பொற்காசுகள் வைத்து கட்டி வைக்கப்பட்டிருந்த உரிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு உறியடி திருவிழா நடைபெற்றது.
அப்போது மூன்று நாட்களாக விரதம் இருந்து வந்த இரண்டு இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு உறியடித்தனர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்பு உறியடித்து அதில் இருந்த தேங்காய் மற்றும் பொற்காசுகளை இளைஞர்கள் எடுத்தனர் தொடர்ந்து உற்சவம் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.
அப்போது இங்கு கூடியிருந்த பாகவதர்கள் கிருஷ்ணன் வேடம் அணிந்து இருந்த சிறுவனை நடுவில் வைத்து நாமவலி கீர்த்தனை பாடி குச்சிப்புடி ஆடினர். இந்த விழாவில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments