Breaking News

திருப்பத்தூரில் கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை வழங்கும் விழா எம்எல்ஏ பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கும்மிடிக்காம்பட்டி, நார்சாம்பட்டி, மோட்டூர, நரியனேரி, மானவள்ளி, சின்னகசிநாயக்கன்பட்டி , வெங்களாபுரம், ப.முத்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்ல பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா நேற்று  நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கி சிறப்புரை ஆற்றினார். 


இதில் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிரேம்குமார், ராஜேந்திரன், கந்திலி  ஒன்றிய திமுக செயலாளர்கள், மோகன்ராஜ், குணசேகரன், முருகேசன்,  கந்திலி. ஒன்றிய துணை சேர்மன் மோகன்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன்,  மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- திருப்பத்தூர் ஒளிப்பதிவாளர் சீ.பூபதி
9047055221

No comments

Copying is disabled on this page!