கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார் துரை. சந்திரசேகர் MLA.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 71 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பிலான வீடு கட்டுவதற்கான பணி உத்தரவினை பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் விழா அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு, கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து பயனாளிகளிகளுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிஞ்சிவாக்கம், ஜெகநாதபுரம், ஆமூர், மாதவரம், ஆண்டார்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 71 பயனாளிகளுக்கு இல்லம் ஒன்றுக்கு ரூ.3.50 மதிப்பீட்டிலான பணி உத்தரவு ஆணைகளை பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் வழங்கினார்.
No comments