புதுவையில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுபோட்டி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.
திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞர் அணி சார்பில் நூறு இளம் பேச்சாளர்களை தேர்வு செய்யும் பேச்சுப்போட்டி ரோஸ்மா திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு "என் உயிரினும் மேலான" என்ற தலைப்பில் தொடங்கி கலைஞரின் தொலைநோக்கு பார்வை, சுயமரியாதைக்கார் கலைஞர் உட்பட பல்வேறு தலைப்புகளில் பேசி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் முதல் மூன்று மாணவர்கள் தமிழக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலம் மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments