Breaking News

திருப்பத்தூரில் கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கும் விழா.


திருப்பத்தூர் மாவட்டம் ஏ.கே மோட்டூர் ஊராட்சியில் இன்று கலைஞரின் கனவு திட்டமான கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான அனுமதி ஆணையை நமது மாண்புமிகு. சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி  அவர்களால் கனவு இல்லம் கட்டுவதற்க்கான பணி ஆணை வழங்கப்பட்டது.


ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு அனைவரையும் வரவேற்றார், இதில் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர்  விஜயா அருணாசலம் ராஜேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், ராஜேந்திரன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் அவர்களால் ஏகே மோட்டூர் ஊராட்சியில் 34 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் ஊராட்சி செயலர் வசந்தி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி பணியாளர்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் கலந்து கொண்டார்கள்.


நிகழ்ச்சி முடிவில் துணை தலைவர் காஞ்சனா சிவப்பிரகாசம் நன்றி உரை கூறினார்.

No comments

Copying is disabled on this page!