ஜிப்மர்: இரட்டை குடியுரிமை விவகாரம், மத்திய அமைச்சரிடம் புகார்.
ஜிப்மரில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் மத்திய சுகாதார அமைச்சர், கவர்னர் கைலாஷ்நாதனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், ஜிப்மரில் இந்தாண்டும் தமிழகம், பிற மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், இரட்டை குடியுரிமையுடன், புதுச்சேரி மாணவர்களுக்கான சீட்டுகளை பறிக்க முயற்சி செய்வது தெரிய வந்துள்ளது.
இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரி மாணவர்களின் சீட்டை அதிகரிப்பதை மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா, கவர்னர் கைலாஷ்நாதனிடம் புகார் தெரிவித்து உள்ளோம்.இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஜிப்மர் நிர்வாகமும் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 25 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதி செய்ய வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., பி.சி.எஸ்., அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட விதிகளை தமிழகம் உள்பட பிற மாநில அதிகாரிகள் தவறாக பயன்படுத்திக்கொண்டு டெபுடேஷன் என்ற பெயரில் ஜிப்மரில் சீட்டுகளை பெறுகின்றனர். அப்படி சீட் பெற்ற பிறகு மீண்டும் சொந்த மாநிலத்திற்கு சென்று விடுகின்றனர். இது கண்டிக்கதக்கது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை ஜிப்மர் நிர்வாகம் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments