திருத்தணியில் பூட்டை உடைத்து 33 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி, ரூ.3 இலட்சம் ரொக்கம் கொள்ளை.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரில் என்எஸ்சி போ சாலையில் உள்ளது சண்முகம் நகை விற்பனை மற்றும் அடகு கடை. இந்த கடை அருகில் ரயில்வே துறையின் சார்பில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் கடையை பூட்டி விட்டு உரிமையாளர் சண்முகம் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 33 சவரன் நகை 10 கிலோ வெள்ளி மற்றும் ரூ 3 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து சண்முகம் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். திருத்தணி டிஎஸ்பி கந்தன் மற்றும் இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
கடையில இருந்து சிசிடிவி கேமராக்களை உடைத்தும், சேமிப்பு கருவியை உடைக்க முயன்று முடியாததால் அப்படியே சென்றதும் தெரியவந்தது. திருத்தணி நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments