சிவகங்கை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 5 பேர் காயம்
காயம்சாலைகிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு. 12 காளைகள், 118 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. மாடு முட்டியதில் ஐந்து பேர் காயம்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள சாலைகிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 காளைகளும் அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 118 வீரர்களும் பங்கேற்றனர்.
வட்டமாக அமைக்கப்பட்டுள்ள மைதானத்தின் நடுவே கை கால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முதலில் களம் இறங்கிய 8 மாடுகளில் 5 மாடுகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் செயல்பட்டு அதனை அடக்கி பார்வையாளர்களின் கைதட்டளை பெற்றனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
போட்டியில் மாடு முட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண சாலைகிராமம் மட்டுமில்லாமல் இளையாங்குடி, சூராணம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மஞ்சுவிரட்டு ஆர்வளர்கள் போட்டியினை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
No comments