Breaking News

இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்.


சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்.


செப்டம்பர் 11ம் தேதி இம்மானுவேல் சேகரனார் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமுதாய அமைப்பாளர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பேசிய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்: இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தன்று தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே (கார் மட்டும்) செல்ல வேண்டும், வாடகை வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. 


மேலும் அஞ்சலி செலுத்த செல்பவர்களின் வாகன எண், வாகன பதிவு சான்று, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்களின் விவரங்களை செப். 6ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் அளித்து வாகன அனுமதி சீட்டு பெற்று, அஞ்சலி செலுத்த போகும்போது வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாமல் செல்ல அனுமதி இல்லை. வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்தி செல்ல வேண்டும். 


அதேபோல் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தாமல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நினைவிடத்திற்கு செல்ல வேண்டும். வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தியோ, மேற்கூரையில் அல்லது படிக்கட்டிலோ பயணித்து செல்ல கூடாது. வாகனங்களில் ஆயுதம் ஏதும் எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி இல்லை. 


வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது என தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!