வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் பழைய அரசு மருத்துவமனை.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 30.8.2024 இன்று P M J V K 2019, 2020 திட்டத்தின் மூலம் ரூ 758,58 இலட்சங்கள் மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவமனை நவீனமாக்கப்பட்டு சுமார் ஒரு ஆண்டுகளுக்கு முன்னதாக பழைய அரசு மருத்துவமனையில் இருந்து அனைத்து மருத்துவ உபகரண பொருட்கள் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய மருத்துவமனை பயன்பாட்டில் உள்ளது இந்நிலையில் பழைய அரசு மருத்துவமனை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது இதில் மது அருந்துவது சூதாட்டம் கஞ்சா விற்பனை அதையும் தாண்டி இரவு நேரங்களில் இந்த மருத்துவமனையில் விபச்சாரத்தில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.
இந்த அரசு மருத்துவமனையின் நுழைவாயில் கதவு எந்நேரமும் திறந்தே இருப்பதால் இது போன்ற குற்ற செயல்கள் நடைபெறுவதாகவும் இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்துக்கொண்டே செல்கின்றனர் இதன் மீது அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகவும் உள்ளது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ்.விஜயகுமார்
No comments