Breaking News

கொல்லங்குடிகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம்.


கொல்லங்குடிகள் கோவில் திருவிழாவை  முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம்.  35 மாட்டுவண்டிகளும்,  16  குதிரை வண்டிகளும் பங்கேற்பு. பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களிப்பு.


சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 


பெரிய மாடு, சின்னமாடு , நடு மாடு  என 3 பிரிவுகளாக  நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் 35 ஜோடி மாடுகளும், ஒரு பிரிவாக நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 16 வண்டிகளும் பங்கேற்றன. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 19 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 8 ஜோடிகள் என சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 35 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 மைல் தொலைவும், நடுமாட்டிற்கு ஏழு மைல் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 மைல் தூரமும்,  அது போல் குதிரை வண்டி பந்தயத்திற்கு 8 மைல் தூரமும், பந்தைய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.  


மதுரை தொண்டி சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் எல்லையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், குதிரை வண்டி உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும்  ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


இப்போட்டியினை கொல்லங்குடி, அழகாபுரி, சிவகங்கை, காளையார்கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாள்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக போட்டியினை கண்டுகளித்தனர்.

No comments

Copying is disabled on this page!