போச்சம்பள்ளி அருகே இந்து கோயிலுக்கு முஸ்லிம் மக்கள் சீர்வரிசை,இந்து முஸ்லிம் ஒற்றுமை காட்டும் நிகழ்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மதநல்லினக்கம் மற்றும் மத ஒற்றுமையை உறுதிபடுத்தும் வகையில் இந்து கோவிலுக்கு சீர்வரிசையோடு அண்ணதானம் அளித்த முஸ்லீம் மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி கிராமத்தில் உள்ள கந்தமாரியம்மன் கோவில் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது வடமலம்பட்டி கிராமத்தில் இந்துக்கள் உள்ள அளவுக்கு முஸ்லீம் மக்களும் உள்ளனர்.
இக்கிராமத்தில் இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்தும் வகையில், கும்பாபிஷேக நிறைவு நாளான நேற்று மண்டல பூஜை நடைபெற்ற மண்டல பூஜைக்கு வடமலம்பட்டி முஸ்லிம் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சீர்வரிசையோடு ஊர்வலமாக வந்து கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் முஸ்லிம் மக்கள் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மத ஒற்றுமையை உணர்த்தும் வகையிலும், மத நல்லினக்கத்தை உறுதிபடுத்தும் வகையில் வடமலம்பட்டி கிராமத்தில் உள்ள இந்து-முஸ்லிம் மக்கள் ஒன்று கூடி மண்டல பூஜை நடத்தியது சுற்று வட்டார கிராமங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
No comments