பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொடூர தாக்குதலை கண்டித்து கோவில்பட்டியில் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொடூர தாக்குதலை நிறுத்த கோரியும் மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக இந்து முன்னணி சார்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்.
பங்களாதேஷில் உள்நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக அங்குள்ள இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுவதும் அவர்களுடைய வீடுகள் சூறையாடப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments