இந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி நாட்றம்பள்ளியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நமது அண்டை நாடான பங்களாதேஷ் நாட்டில் அங்கு வாழும் இந்துக்கள், கோயில்கள், வீடுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் சம்பவத்தை கண்டித்தும் மத்திய அரசு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவி கண்டன ஆர்ப்பாட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றிய தலைவர் சிங்காரம் தலைமையில் நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி தலைவர் இளங்கோ, பாஜக நிர்வாகி குருசேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் பிரபு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments