புதுச்சேரி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதியின்றி நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதியின்றி நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
புதுச்சேரி நகரப் பகுதியில் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது.இங்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்களும் நாள்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும், நோயாளிகள் அதிக அளவில் வருவதன் காரணமாக போதிய படுக்கைகள் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக நோயாளிகள் அதிக அளவில் வரும் போது அவர்களை தரையில் பாய் விரித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேபோல் படுக்கை பற்றாக்குறை காரணமாக ஒரே படுக்கையில் இரு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படுக்கை பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
மேலும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தேவையான படுக்கை வசதிகளை செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments