பணி நிரந்தரம் கோரி ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் அலுவலகத்தில் முன்பு கருப்பு பேட்ச் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள ஊரக வளர்ச்சித் துறையில், சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 16 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அலுவலகம் முன்பு ஒன்றிணைந்த ஊழியர்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளை கண்டித்தும், அரசை கண்டித்தும் கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments