தூத்துக்குடியில் ஜி.கே.மூப்பனார் நினைவுநாள் அனுசரிப்பு.
தூத்துக்குடியில் ஜி.கே.மூப்பனார் நினைவுநாளையொட்டி அவரது படத்திற்கு தமாகா மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்மாநில காங்கிரஸ் நிறுவனத்தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 23ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது திருவுருவப்படத்திற்கு தமாகா மத்திய மாவட்டத் தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமையில் தமாகாவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், தெற்கு மாவட்டத் தலைவர் சுந்தரலிங்கம், தூத்துக்குடி மாநகர தலைவர் ரவிக்குமார், மாவட்ட துணைத் தலைவர் பெஸ்கி ராஜா, மாநில இணைச் செயலாளர் உறுப்பினர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments