ஜி.கே.மூப்பனாரின் நினைவு புதுவை அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை.
ஜி.கே.மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி மரப்பாலம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஜி.கே மூப்பனாரின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி முதலியார்பேட்டை மரப்பாலம் சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவை தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், சதுக்கத்தின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர் மூப்பனாரின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments