Breaking News

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி ஆறுமுகநேரியில் நடைபெறுகிறது!


தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல், இதுகுறித்து மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகில் உள்ள எஸ்.பி. மஹாலில் நடைபெறவுள்ளது. 

இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளை ஏற்று திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி பணி மற்றும் மக்கள் பணியாற்றுவது குறித்தும், திமுக பவள விழா ஆண்டில் நடைபெறவுள்ள முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய பிரதிநிதிகள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!