நடிகர்கள் பலர் கட்சி துவங்கி காணாமல் போய்விட்டார்கள். - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேச்சு.
நடிகர்கள் பலர் கட்சி துவங்கி காணாமல் போய்விட்டார்கள். புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் என்ன ஆவார் என்பதை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கூறுவார்கள். திருச்செந்தூரில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேச்சு.
திருச்செந்தூரில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் டிஜிட்டல் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், பாராளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. சட்டமன்றத் தேர்தல் அதிமுகவா? திமுகவா?. அண்ணாமலை முதல்வராக வர முடியுமா? அவருக்கு என்ன செல்வாக்கு உள்ளது.
கர்நாடகத்தில் தவறு செய்து பணியிடை நீக்கம் செய்யும் நிலை வந்த போது பயந்து வந்தவர் தான் அண்ணாமலை. செலவுக்கு என்ன செய்கிறார் அண்ணாமலை. கேட்டால் நண்பர் கொடுக்கிறார் என்கிறார். எந்த நண்பர் கொடுக்கிறார் என்ற விபரத்தை கூற முடியுமா? திமுகவைச் சேர்ந்த 15 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கவர்னரிடம் கொடுத்தாக அண்ணாமலை கூறுகிறார்.
ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அனைத்து அமைச்சரிடமும் பணம் வாங்கிக் கொண்டதாக அனைவரும் பேசுகிறார்கள். எடப்பாடியார் குறித்து பேசுவதற்கு உனக்கு என்ன அருகதை உள்ளது. இந்தியா முழுவதும் பாஜக அழிந்து வருகிறது.
பாஜக அழிவு நிலையம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சேர்த்து விடுவோம் என்று எடப்பாடியாரை கடும் நெருக்கடி கொடுத்த போதும் கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படக் கூடியவர் எடப்பாடியார். அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களால் பிரிந்து பாஜகவுக்கு சென்றவர்களை விவரத்தைக் கூறி மீண்டும் அதிமுகவுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறோம். நாம் தமிழர் கட்சியினருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
நாட்டில் எது நடக்காதோ அதை நான் நிறைவேற்றி காட்டுவேன் என்று கூறி வருகிறார் சீமான். கமலஹாசன் வந்தார் ஒரு சதவீதம் ஓட்டை பெற்றார். அதன் பின் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. விஜயகாந்த் அதிமுகவில் ஒரு முறை கூட்டணி வைத்ததன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பின்னர் அவரும் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
நடிகர்கள் அனைவரும் கட்சி தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜி கட்சி தொடங்கி காணாமல் போய்விட்டார். ரஜினிகாந்த் அண்ணா இன்னா என்று கூறி அவரும் இடம் தெரியாமல் போய்விட்டார். கடைசியாக விஜய் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார் இவர் என்ன ஆவார் என்று மக்கள் சொல்வார்கள்.
சட்டமன்றத் தேர்தலிலோ நகராட்சி தேர்தலிலோ அல்லது வார்டு தேர்தலிலோ வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதி ஆன பின்னர் அண்ணாமலை எடப்பாடி அவர் குறித்து பேசட்டும் என்று பேசினார்.
No comments