பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து மருத்துவம் படிக்கச் செல்லும் இரு மாணவர்களுக்கு உதவும் மருத்துவர்.
பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து மருத்துவம் படிக்கச் செல்லும் இரு மாணவர்களுக்கு காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை மருத்துவர் குமரேசன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பண உதவி செய்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கமலை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதி பெரியசாமி - விஜயா. இவர்களுடைய மகன் நாகராஜ் வயது 17மாற்றத்திறனாளியான நாகராஜ் சிறு வயது முதலே குடும்ப சூழ்நிலை காரணமாக தாய் தந்தைக்கு உதவியாக காலையில் எழுந்து மாடுகளுக்கு தீவனம் வைத்து பராமரிக்கும் பணி செய்து ஓய்வு நேரம், பள்ளி விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக ஆடுகளை மேய்த்துக் பீர்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் படித்து நடந்த முடிந்த நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 136 மதிப்பெண் எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததுள்ளது.
மேலும் இதே போல கமலை கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி உடையப்பன்- காளியம்மாள் தம்பதியின் மகன் ரவி (18) 5ம் வகுப்பு படிக்கும் போதே புற்று நோயால் தாயை இழந்த நிலையில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் அரசு பள்ளியில் படித்து நடந்து முடிந்த நீட் தேர்வில் 597 மதிப்பெண் எடுத்து அரசு பள்ளிக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
போதிய அடிப்படை மற்றும் பொருளாதார வசதிகள் இல்லாததால் மருத்துவம் படிக்க இடம் கிடைத்த மாணவர்களின் கனவு சிதைந்து விடாமல் இருக்க குளோபல் மிஷன் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் மருத்துவர்வருமான குமரேசன் அந்த இரு மாணவர்களையும் மருத்துவமனைக்கு வரவழைத்து இருவருக்கும் தலா ₹5000 ரொக்கமும் மற்றும் ஸ்டெதஸ்கோப் வழங்கி உதவி செய்தார்.
மேலும் மருத்துவமனை டைம்ஸ் ஹல்த் கேர் பவுண்டேஷன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு இரு மாணவர்களின் படிப்பு தொடர்பான செலவுகளுக்கு உதவி செய்ய இருப்பதாக உறுதி கூறினார் .
No comments