Breaking News

செம்பனார்கோவில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் மறைந்த விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்த நாளை ஒட்டி திருக்கடையூர் பேருந்து நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு தேமுதிக சார்பில் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை ஒட்டி தேமுதிகவினர் கேக் வெட்டினர் பொதுமக்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டது செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட கேப்டன் மன்றம் திருக்கடையூர் ராமச்சந்திரன் விழா ஏற்பாடு செய்திருந்தார். 


இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  பிள்ளை பெருமாநல்லூர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ஞான சத்திரியன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், ஒன்றிய கேப்டன் மன்ற சகாதேவன், ஊராட்சி செயலாளர் மதன்ராஜ், மற்றும் சுபாஷ் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!