மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்.
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை தேமுதிக மாவட்ட அவை தலைவரும் பரசலூர் கவுன்சிலருமான கே எஸ் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது அன்னதானமும் வழங்கப்பட்டது.
மறைந்த தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தின் மறைவிற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அக்கட்சியினர் கனத்த இதயத்துடனேயே இந்த பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் முக்கூட்டு பேருந்து நிலையம் அருகே தேமுதிக மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவரும் பரசலூர் ஒன்றிய கவுன்சிலருமான கே.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட அவைத்தலைவர் கே.எஸ்.கிருஷ்ணன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்து கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி கொண்டாடினர்.
இதில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அவ்வழியே வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு சென்றனர்.
நிகழ்ச்சியில் தேமுதிக முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், முன்னாள் துணை செயலாளர் சேது ராமன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஆப்பிள் ராஜ், முன்னாள் மாவட்ட தொண்டரணி செயலாளர் காமராஜ், மற்றும் சீர்காழி கே வி எஸ் வடிவேலு, முருகானந்தம், மற்றும் தேமுதிக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
No comments