Breaking News

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் காரைக்காலில் ஆய்வு.


புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக புதிதாக பெறுப்பேற்ற கைலாசநாதன் காரைக்கால் மாவட்டத்தில் முதல் முறையாக ஆய்வு செய்தார். இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்கும் குப்பை கிடங்கை நேரில் சென்று அய்வு செய்ததுடன், குப்பைகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். 

அப்போது ஒப்பந்ததாரர் நரேந்திரன் உடன் இருந்தார். அதனை தொடர்ந்து காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்தை ஆய்வு செய்து மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மீனவர்கள் "காரைக்கால் துறைமுகத்தை விரிவு படுத்த வேண்டும், மீனவர்களை இ.பி.சி பிரிவிலிருந்து எம்.பி.சி பிரிவுக்கு மாற்ற வேண்டும், இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுத்தர வேண்டும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீன்பிடிப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கித் தர வேண்டும் எனவும் மீனவர்கள் துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர். 


காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரியில் ரசாயன கலப்பு இல்லாத காய்கறிகள் பழங்கள் மலர் வகைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார் அப்போது பேசிய துணை நிலை ஆளுநர் "நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் நம்முடைய கண்டுபிடிப்புகள் விவசாயிகளை பொருளாதார ரீதியாக உயர்த்தும் அளவில் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 


விதை உற்பத்தியை கல்லூரி சார்பில் செய்வதோடு சுய உதவி குழுக்கள் மூலமும் செய்தால் அவர்களும் சுயசார்பு பொருளாதாரத்தில் மேம்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ், துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!