தரை தொட்டு செல்லும் மின்கம்பி: உயிருக்கு ஆபத்து.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே வடுகனூர் கிராமத்தில் வசிக்கும் சந்திரன் என்பவர் தனது நிலத்திற்கு செல்லும் வழியில் மின் கம்பி மிகவும் தாழ்வாக இருப்பதால் உயிருக்கு ஆபத்து என கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .மழைக்காலம் என்பதால் நிலத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கால்நடைகள் மின் கம்பியை தொட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என விவசாயி சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments