அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதுப்பித்த டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 31வது பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதுப்பித்த டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டைகளை அதிமுக தெற்கு மாவட்ட அமைப்புச்சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் சுதாகர் வழங்கினார்!
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 6 பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டை வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தெற்கு மாவட்ட மத்திய பகுதி, 31வது வார்க்குட்பட்ட பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை மாவட்ட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், தெற்கு மாவட்ட அமைப்புச்சாரா ஓட்டுநர் அணிச் செயலாளருமான சுதாகர் வழங்கினார். இதில், வட்டச் செயலாளர் வேலு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பரிவூரணராஜா மற்றும் நிர்வாகிகள் சீத்தாராமன், ஜெயராமன், மாடசாமி, இசக்கிமுத்து, பாலகிருஷ்ணன், பொன்ராஜ், செல்வகுமார், ஆறுமுகம், குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments