கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்று வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.
இதில் திமுக மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments