நண்பர்கள் போல மெசேஜ் அனுப்பி, பணம் பறிப்பது அதிகரித்துள்ளதால் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
நண்பர்கள் போல மெசேஜ் அனுப்பி, பணம் பறிப்பது அதிகரித்துள்ளதால் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விதவிதமாக புகைப்படங்களை நாம் டி.பி.,புகைப்படமாக வைத்துள்ளனர். உங்களின் இந்த டி.பி., படத்தை டவுன்லோடு செய்து, உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பணம் பறிப்பது சமீபகாலமாக புதுச்சேரியில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக உங்களின் டி.பி., படத்தை போட்டு, நீங்களே உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவதுபோல், நான் ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன். பிளீஸ் பணம் அனுப்பு நண்பா என்று குறுஞ்செய்தி அனுப்பி பணம் பறிப்பது அதிகரித்துள்ளதால் உஷாராக இருக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments